
நாட்டில் அரசியல் நெருக்கடி படுமோசமாக உள்ளது.பின்புற வழியாக ஆட்சிக்கு வந்த பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்.
யார் காலை யார் வாரி விடுவார்கள் என்ற அச்சத்தில் அந்த கூட்டணி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை திட்டமிட்டு கவிழ்த்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நோய்த் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார்கள்.
மேலும் அரசியல் நெருக்கடியும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
நாட்டில் நோய்த்தாக்கம் குறைந்தவுடன் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.மக்களால் தேர்வு செய்யப்படும் ஆட்சி அரியணையில் அமர வேண்டும்.
அந்த வகையில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பெருவாஸ் க நாடாளுமன்ற உறுப்பினரும் பேரா மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகரின் இந்திய அரசியல் பிரிவு அதிகாரி தினகரன் தெரிவித்தார்..
இதனிடையே மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவுக்கு ஏற்ப நாடாளுமன்றம் விரைந்து கூட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
