25.3 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

நோய்தொற்று தாக்கத்தினால் 122,238 பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 21

இவ்வாண்டு தொடங்கி இதுவரை 122,238 பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
122,238 பேரிடமிருந்து சுகாதார அமைச்சின் மனோவியல் ஆதரவு தொலைபேசி சேவைப் பிரிவு அழைப்பினை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் 1 தேதி முதல் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வரை இந்த அழைப்புகள் பெறப்பட்டதாக அவர் கூறினார்.
அவற்றில் 109,806 அழைப்புகள் அதாவது 89.4 விழுக்காடு கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக உண்டான மனோரீதியிலான பாதிப்புகள் தொடர்பான அழைப்புகளாகும்.
வேலை, வருமானம் மற்றும் தங்குமிட வசதியை இழந்தது, குடும்ப உறுப்பினர்கள் அல்லது கணவன் மனைவிக்கிடையிலான சண்டை, விவகாரத்து, துன்புறுத்தல் போன்ற உடல் மற்றும் மனோரீதியிலான பிச்னைகளை அந்த தொலைபேசி அழைப்புகள் மையமாக கொண்டிருந்ததாக அவர் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles