28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

ஜெர்மனியில் இருக்கும் கணேஸ்வரன் நடராஜா மீது போலீஸ் விசாரணை

🔥 Views : 7
👁 Reading Now : 35

Racist in vaccine Malaysia என்ற மலேசிய தடுப்பூசித் திட்டத்தில் ஜெர்மனியில் இருக்கும் கணேஸ்வரன் நடராஜா என்பவர் தனது பேஸ்புக்கில் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறை இயக்குனர் அப்துல் ஹாலில் ஹசான் தெரிவித்தார்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சினோவோக் தடுப்பூசி யும் முஸ்லிம் மக்களுக்கு உயர் ஆற்றல் திறன் கொண்ட பைசர் தடுப்பூசியும் போடப்படுவதாக 8 நிமிடம் கொண்ட காணொளியில் பல குற்றச்சாட்டுக்களை கணேஸ்வரன் முன் வைத்துள்ளார்.
இவரின் காணொளியை 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர். அவதூறு மற்றும் இனவாதத்தை தூண்டும் நோக்கில் இவர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பதை போலீசார் மிகக்கடுமையாக கருதுகிறார்கள்.
தற்போது ஜெர்மனியில் இருக்கும் இவர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை 19 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles