25.2 C
Kuala Lumpur
Saturday, May 2, 2026

Vetri

ஜூலை 11ஆம் தேதி திருச்சி புறப்படுகிறது மலேசியன் ஏர்லைன்ஸ

வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் திருச்சி புறப்படுகிறது என்று கேபி டிராவல்ஸ் உரிமையாளர் கேபி சாமி தெரிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நாட்டிற்குள் சுற்றுப் பயணிகளாக வந்த வெளிநாட்டவர்கள் mco உத்தரவால் இங்கு சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் நாடு திரும்ப அரசாங்கம் வழங்கிய கால அவகாசம் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது.
இருப்பினும் இன்னமும் நாட்டிலேயே தங்கி இருக்கும் வெளிநாட்டவர்கள் நாடு திரும்ப அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பதாக கேபி சாமி தெரிவித்தார் அந்த வகையில் வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து திருச்சியை நோக்கி மலேசியன் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் புறப்படுவதாக அவர் சொன்னார்.
இன்னமும் நாட்டில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்திய பிரஜைகள் இந்த விமானத்தின் மூலம் தாயகம் திரும்பலாம்.
முன்னதாக அவர்கள் இந்திய தூதரகத்தில் தங்களைப் பதிந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புக்கு கே.பி.சாமி 016-2626755 அல்லது நிர்வாகி கவின் 016-2229341 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles