28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்ற செயல்; பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டனம்

🔥 Views : 12
👁 Reading Now : 31

குரங்குகளுக்கு நஞ்சு வைத்து கொன்ற செயல் கொடுமையானது.இந்த இரக்கமற்ற செயலை ஆண்டவன் கூட மன்னிக்க மாட்டான் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வித் பிரிவுத் தலைவர் என்.வி.சுப்பாராவ் கூறினார்.
பினாங்கு பாயா தெருபோங் பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதியில் 10 குரங்குகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மனித இனத்திற்கு ஒவ்வாத இச்செயல் பலரின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.ஒரு உயிருள்ள ஜீவனை விஷம் வைத்துக் கொல்லுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.காட்டில் வாழும் வாயில்லா அந்த ஜீவன்களுக்கு விஷம் கொடுக்க வேண்டிய அவசியமும்,கட்டாயமும் என்னவென்று அவர் கேள்வியெழுப்பினார்.மேம்பாட்டு திட்டங்களால் காடுகள் அளிக்கப்படும்போது இந்த ஜீவன்கள் எங்கே போகும் எனவும் என்.வி.சுப்பாராவ் கேள்வியெழுப்பினார்.குரங்குளால் தொல்லை என்றார் அவற்றை ஓசை கொண்டு விரட்டி விடலாம் அல்லது வன விலங்கு இலாகாவிடம் புகார் செய்யலாம்.சட்டங்களை மீறி இனிமேல் யாரும் இதுபோன்ற கேவலமா செயலை யாரும் செய்யக் கூடாது என அவர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles