
நாட்டில் உள்ள உணவகங்கள் நாளை முதல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. வாடிக்கையாளர்களுக்கு பொட்டலங்கள் மூலம் உணவுகள் வழங்க மட்டுமே அனுமதி என்று அவர் இன்று அறிவித்தார்.
இதுக்கு முன்னர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே உணவகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
