25.2 C
Kuala Lumpur
Saturday, May 2, 2026

Vetri

வசதியற்ற பி40 குடும்பங்களுக்கு பாடாங் செராய் எம்பி கருப்பையா தொடர்ந்து உதவி!

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில்
சிரமப்படும் குடும்பங்களும் அதிகமாக உள்ளன.எம்சிஓ அமலாக்கத்தால்
எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில்
வருமானமும் இன்றி அல்லல்படும் குடும்பங்களுக்கு கெடா பாடாங்
செராய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கருப்பையா மனிதாபிமான
உதவிகளை வழங்கினார்.தமது நாடாளுமன்றத் தொகுதியில் அவதியுறும்
பி40 குடும்பங்களுக்கு பொருளுதவியும்,நிதியுதவியும் அவர் வழங்கினார்.
கடந்த ஓராண்டு காலமாக கோவிட் – 19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
காலத்தில் தொடர்ந்து இதுபோன்ற உதவிகளை வழங்கி வருவதாக கூறிய
அவர்,தொகுதி மக்கள் பிரதிநிதி என்ற வகையில்,எந்தவொரு பேதமுமின்றி
மூவினத்துக்கும் சேவையாற்றுவது தமது கடமை என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles