28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

மக்களை நாடி சென்று உதவும் கேகே தலைவர் முனியாண்டி

🔥 Views : 7
👁 Reading Now : 20
     கோவிட் - 19 முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மிகவும் சிரமப்படும் குடும்பங்களுக்கு புக்கிட் மெர்தாஜாம் தாமான் சௌஜானா பெர்மாய் மற்றும் தாமான் கீன்வேய்ஸ் குடியிருப்பு பகுதியிலுள்ள சுமார் 20 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த வட்டார குடியிருப்பு,கிராம,சமூக மேலாண்மைக் குழுவின் தலைவரும்,சமூக சேவையாளருமான டி.முனியாண்டி தலைமையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த எம்சிஓ காலத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும்,வருமானமின்றி சிரமப்படும் மூவினங்களுக்கும் உதவிப் பொருட்களை வழங்கியதாக கூறிய அவர்,சிரமப்படும் குடும்பங்களுக்கு அன்று தொட்டு இன்று வரையில் தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருவதாக,தமிழ்ப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியருமான அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.இவருடன் எம்பிகேகே பொறுப்பாளர்களும் உடனிருந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles