
நோய்த்தொற்று தாக்கத்தினால் நாடு முழுவதும் அவசரகால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பகாங் மாநிலத்தின் பல இடங்களில் மக்கள் வெளியேற முடியாத அளவுக்கு சாலை தரப்புகளும் போடப்பட்டுள்ளன.
தெமர்லோ, மெந்தகாப் உட்பட பல இடங்களில் சாலை தடுப்பு போடப்பட்டு இருப்பதால் மக்கள் மாவட்டத்தைக் கடக்கக முடியாமல் உள்ளனர்.
நிலைமை இப்படி இருக்க மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் நிர்வாகம் தனது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சந்தா பணத்தை கட்டும்படி கேட்டுக்கொண்டுள்ளது. மாரான் மரத்தாண்டவர் ஆலய அலுவலகத்தில் அல்லது வட்டார பொறுப்பாளர்களிடம் சந்தா பணத்தை செலுத்தலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
இதுபற்றி கருத்துரைத்த ஆலய உறுப்பினர்களான மனோகரன், செல்வநாயகம், வேலு, செல்லப்பா, புத்னா, ராஜா, முனியாண்டி ஆகியோர் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி வேறு மாவட்டத்திற்கு செல்லமுடியாத நிலையில் இருக்கிறோம். இந்நிலையில் சந்தா பணத்தை எப்படி கட்டுவது என்று கேள்வி எழுப்பினார்கள்.
சந்தா பணத்தை செலுத்தும் கால அவகாசத்தை ஆலய நிர்வாகம் மேலும் நீட்டிக்க வேண்டும். நாங்கள் உத்தரவை மீறி மாவட்டத்தை கடந்தால் போலீஸார் அபராதம் விதிப்பார்கள் என்பதை ஆலய நிர்வாகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆகவே எங்கள் கோரிக்கையை ஏற்று மாரான் மரத்தாண்டவர் ஆலயம் நிர்வாகம் கால அவகாசம் வழங்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.



