
கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் தாமான் இம்பியான் இமாஸ் பகுதியில் தமிழ்ப்பள்ளிக்கு அடையாளம் காணப்பட்ட 6.269 ஏக்கர் நிலம் கை நழுவி போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஜசெக சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்க ஆட்சியின் போது அந்த நிலத்தை பெறும் முயற்சி மேற்கொண்டு அந்த புதிய தமிழ்ப்பள்ளிக்கான நிலக் கோரிக்கையை முன் வைத்து அதற்கான ஏற்படுகளை அப்போதைய நகராண்மை கழக உறுப்பினர் குணசேகரன் நாகப்பன் மணுக்களையும் சமர்ப்பித்து விட்ட நிலையில் திடீர் ஆட்சி மாற்ற ஏற்பட்டதால் அடுத்தக் கட்ட நகர்வு என்ன என்று தெரியமால் இருப்பதாக அறியப்படுகிறது.
அந்த திட்டப் பணிகள் சரியாக முடிந்து இருந்தால் செம்புரோங் தோட்ட தமிழ்ப்பள்ளி இங்கு வருவதற்கான சாத்திய கூறுகள் அனைத்தும் ஏற்பாடு ஆகியிருக்கும்.
அத்தோடு,அனைத்து ஏற்பாடுகளும் கிட்டதட்ட முடிந்துவிட்ட நிலையில் இருப்பதால் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இம்பியான் இமாஸ் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி அமைய துணை புரியும் படி .வித்யானந்தனை வழியுறுத்தி கேட்டு கொள்வதாக சந்திர சேகரன் கூறிப்பிட்டார்.
மேலும்,மேல்மட்ட ம இகா தலைவர்கள் இந்திய சமுதாயத்தின் செல்வாக்கை மீண்டும் பெற கடுமையாக போராடி கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் அப்பள்ளி நிலம் பறிபோனால் அந்த பலிபாவம் ஒட்டு மொத்தமாக மஇகவை சேரும் என்பதை மனதில் கொண்டு ஆட்சிகுழு உறுப்பினரான வித்யானந்தன் இறுதி கட்ட நிலையில் இருக்கும் அந்த நில ஒப்புதல் விவகாரத்தில் மாநில அரசாங்கத்திடம் இருந்து அங்கிகாரம் பெற்று தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னாள் அரசாங்கத்தினால் பெறப் பட்ட நிலம் தானே என்று அலட்சியம் செய்யாமல்,அந்த நிலைத்தை இந்திய சமுதாயத்திற்க்கு கிடைக்க வழி காண வேண்டும். அதை விடுத்து அந்த நில விவகாரத்தில் அரசியல் நடத்த முயற்சி செய்தால் அது வரலற்று பிழையாக அமைவதோடு அடுத்த சந்ததியருக்கு செய்த துரோகமாகிவிடும் என அவர் நினைவு படுத்தினார்.



