25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நாளை 29 தேதியோடு நாடாளுமன்றம் இயல்பாகவே கலைந்து விடுமா?

🔥 Views : 7
👁 Reading Now : 37

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடைசியாக 29-12-2020 தேதி நடைபெற்றது.
நாளை ஜூன் 29 தேதியோடு ஆறு மாதங்கள் நிறைவடைகிறது.
ஆறு மாதங்களில் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்று கூட்டரசு அரசியல் அமைப்பு 55ஆவது விதி குறிப்பிடுகிறது.
அந்த வகையில் நாளை 29ம் தேதியோடு நாடாளுமன்றம் இயல்பாகவே கலைந்து விடுமா என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூன் 16ஆம் தேதி மாமன்னர் நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டும்படி உத்தரவிட்டார்.
நாடாளுமன்றம் இயல்பாகவே கலைந்து விடக்கூடாது எனும் மறைமுகமாக மாமன்னரின் இந்த அறிவிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது அவசர காலத்திலும் நாடாளுமன்றத்தை கூட்டம் முடியும் என்று கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி மாமன்னர் கூறியிருந்ததை டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது பேஸ்புக்கில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles