30 C
Kuala Lumpur
Tuesday, August 18, 2026

Vetri

தினசரி 600 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள்

🔥 Views : 36
👁 Reading Now : 28

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 15 செல்கேர் கிளினிக் மூலம் தினசரி 600 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என கிளினிக் செல்கேர் முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு கிளினிக்கிலும் தினசரி 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் தெரிவித்தார்.
எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றி முன்பதிவின் அடிப்படையில் தடுப்பூசி பெறுவோர் அழைக்கப்படுவார்கள
செல்கேர் கிளினிக்குகள் அளவில் சிறியவையாக உள்ளன. ஆகவே, தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய 65 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஷா ஆலம், பூச்சோங், ஸ்கைபார்க் சுபாங், யு.எஸ்.ஜே. சென்ட்ரல், டேசா மெந்தாரி, செந்தோசா, புத்ரா ஜெயா ஆகிய இடங்களில் உள்ள செல்கேர் கிளினிக்குகள் தடுப்பூசி செலுத்தும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles