
நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டும்படி மாட்சிமை தங்கிய மாமன்னர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸாஹர், மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் உட்பட துணை சபாநாயகர்கள் இன்று மாமன்னரை இஸ்தானா நெகாரா வில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டும்படி மாமன்னர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..sop விதிமுறைகளுக்கு ஏற்ப நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் நடைபெற்ற மலாய் ஆட்சியர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றம் விரைந்து கூட்டப்பட வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


