
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆதரவில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் வகையில் அட்சயப் பாத்திரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தின் வழி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வகைகள் வழங்கப்பட்டன. இப்போது ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் மற்றும் மாநிலத்தில் உள்ள இந்து கோவில்கள் உதவியோடு மீண்டும் அட்சயப் பாத்திர திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாக சிலாங்கூர் மாநில இந்தியர் கிராமத் தலைவர் ராஜேந்திரன் ராசப்பன் தெரிவித்தார்.
அந்த வகையில் அம்பாங் வட்டாரத்தில் பண்டான் பெர்டானா ஸ்ரீ மகா ராஜ கணபதி ஆலயத்தின் உதவியோடு வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவு உடைகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.



