
நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டும்படி மாட்சிமை தங்கிய மாமன்னர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸாஹர், மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் உட்பட துணை சபாநாயகர்கள் ஆகியோர் மாமன்னரை இஸ்தானா நெகாரா வில் சந்தித்த பின்னர் மாமன்னர் சார்பில் இந்த கோரிக்கையை மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
.sop விதிமுறைகளுக்கு ஏற்ப நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் நடைபெற்ற மலாய் ஆட்சியர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றம் விரைந்து கூட்டப்பட வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மாமன்னரின் உத்தரவுக்கு ஏற்ப நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்.
மாமன்னரின் உத்தரவை மதிக்க தவறினால் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டும்படி மாமன்னர் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அமைச்சரவை வெட்கமில்லாமல் இருக்கிறது என்று அவர் சாடினார்.



