
சொந்த தொழில் செய்து குடும்பத்தை கரை சேர்க்க வேண்டும் என்ற
எண்ணத்தில் வியாபாரம் செய்ய ஆர்வம் கொண்டிருக்கும் இந்திய குடும்ப
மாதுவுக்கு தித்தி சேரோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள்
சுல்கர்னாயின் பின் அப்துல் 3,000 வெள்ளி நிதியுதவி வழங்கினார்.
பேரா பாரிட் புந்தாரில் வசிக்கும் கோகிலவாணி த/பெ மூர்த்தி,சொந்தமாக
உணவை தயாரித்து அனுப்பும் தொழிலை செய்ய ஆர்வம் கொண்டு,வாட்சாப்
மூலமாக தம்மிடம் நிதியுதவி கேட்டதாக அவர் கூறினார்.
கணவரும் வேலையிழந்து இருப்பதால்,மனம் தளராத இம்மாதுவுக்கு தமது
சட்டமன்ற சேவை மையத்தின் சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை
வழங்கியதாக சொன்னார்.இந்த தொழில் வாயிலாக அவர்
சிறப்பான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக்
கொண்டார்.



