
சிறிய அளவில் வியாபாரம் செய்ய விரும்பும் சிலாங்கூர் மாநில மக்கள் ஊராட்சி மன்றங்களிடம் தற்காலிக லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வர்த்தக நடவடிக்கையை எளிதாக்கவும் போக்குவரத்துக்கு இடையூறின்றி பாதுகாப்பான இடத்தில் வியாபாரம் புரிவதை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
தற்போது நோய்தொற்று தாக்கத்தினால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக அவர் சொன்னார். தங்கள் வாழ்க்கையைத் தொடர்வதற்கு அவர்கள் சிறு அளவிலான வியாபாரத்தை தேர்வு செய்யலாம்.
தற்காலிக வர்த்தக லைசென்சுக்கு இவர்கள் ஊராட்சி மன்றங்களிடம் விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் கூறினார்.



