
பொருளாதார மீட்சித் திட்டத்தின் கீழ் மோரட்டோரியம் எனப்படும் வங்கிக் கடனை திரும்பச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் கூட்டு வட்டி மற்றும் அபராதக் கட்டணத்தை வங்கிகள் தள்ளுபடி செய்யும் என்று நிதியமைச்ர் டத்தோஸ்ரீ துங்கு ஸப்ருள் அப்துல் அஜிஸ் தெரிவித்தார். வங்கிகளுன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது இவ்விவகாரம் எழுப்பப்பட்ட நிலையில் கூட்டு வட்டி மற்றும் அபராதக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய அவை இணக்கம் தெரிவித்ததாக அவர் சொன்னார்.
மேராட்டோரியம் காலத்தில் வட்டியை அதிகரிப்பது மற்றும் அபராதக் கட்டணம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட்டால் அது குறித்து புகார் செய்யும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.



