29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

யூரோ கிண்ண காலிறுதி சுற்றுக்கு இங்கிலாந்து – உக்ரைன் தேர்வு

🔥 Views : 10
👁 Reading Now : 60

யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து ஜெர்மனி மோதியது

இரண்டாவது பாதியில் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஆக்ரோஷமாக செயல்பட்ட இங்கிலாந்து அணியினர் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினார்.
இதன் மூலம்
75ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் முதல் கோலை ரஹீம் ஸ்டெர்லிங் அடித்தார்.
ஜெர்மனி வீரர்கள் சுதாரித்து மீள்வதற்குள் 86-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் பந்தை தலையால் முட்டி கோலாக்கினார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் ஸ்வீடன், உக்ரைன் அணிகள் மோதின.
முதல் பாதியின் 27ஆவது நிமிடத்தில் உக்ரைன் அணி ஒரு கோல் அடித்தது. 90 நிமிட நேரத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.
கூடுதல் நேரத்தில் அதாவது 121ஆவது நிமிடத்தில் உக்ரைன் அணி மற்றொரு கோலை அடித்தது.
இறுதியில், உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles