26.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

போலீஸ் சிறப்புப் பிரிவை சுயநலத்திற்காக பயன்படுத்தினார் உள்துறை அமைச்சர்!

🔥 Views : 41
👁 Reading Now : 46

தனது அரசியல் சுயநலத்திற்காக புக்கிட் அமான் சிறப்பு போலீஸ் பிரிவை உள்துறை அமைச்சர் ஹம்சா பயன்படுத்தினார் என்று ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் இன்று தெரிவித்தார்.
இதனால் நான் மட்டும் பிரச்சினை எதிர் நோககவில்லை. ஒட்டுமொத்த போலீஸ் சிறப்பு பிரிவு அதிருப்தி அடைந்ததாக அவர் சொன்னார்.
தனக்கு வேண்டிய அந்த உயர் அதிகாரிக்கு முக்கியமான சிறப்பு பிரிவின் இயக்குனராக நியமிப்பதற்கு உள்துறை அமைச்சர் விரும்பினார்.
இதற்கு சிறப்பு போலீஸ் பிரிவு எதிர்ப்பு தெரிவித்தது.
தனக்கு வேண்டிய அந்த அதிகாரியை சிறப்பு பிரிவு இயக்குனராக நியமிப்பதில் உள்துறை அமைச்சர் முனைப்புடன் செயல்பட்டார்.
மேலும் போலீஸ் சிறப்பு பிரிவுக்கு உள்துறை அமைச்சர் நெருக்குதல் கொடுத்தார் என்று அவர் குறிப்பிட்டார். -Image Credit : Moganraj Villavan

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles