29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பெல்ஜியத்தில் வாழும் மலேசியத் தமிழரின் அம்மா பாடல்

🔥 Views : 11
👁 Reading Now : 55

வரும் மே 9-ஆம் தேதி உலகம் அன்னையர் தினத்தை விமர்சையாகக் கொண்டாடுகிறது.
பத்து மாதம் சுமந்து தாலாட்டி சீராட்டி வளர்த்த அன்னையர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அன்னையர் தினம் விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு அன்னையர் தினத்தை முன்னிட்டு பெல்ஜியத்தில் வாழும் மலேசியத் தமிழரான சரவணன் இசையில் அன்னையர்களுக்கு புகழ் மாலை சூட்டும் வகையில் தாலாட்டி தாலாட்டி என்ற பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார். பேரா ஈப்போ பாகான் டத்தோவைச் சேர்ந்த ஐயா அன்பழகன் வரியில் பாடல்கள் உருவாகியுள்ளன.
தாலாட்டி தாலாட்டி என்ற இந்த பாடல் வரிகளுக்கு பெல்ஜியம் சரவணன் இசை அமைத்திருக்கிறார். சரவணன் நெகிரி செம்பிலான் லோபாக் என்ற இடத்தில் பிறந்தவர். 18 ஆண்டுகளாக பெல்ஜியத்தில் இவர் வாழ்ந்து வருகிறார். இவரின் துணைவியாரின் பெயர் பவதாரணி. இதுவரை 50க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்த சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் பாடகர் சூர்யா இந்த தாலாட்டி பாடலை மிக அற்புதமாக பாடி இருக்கிறார்.
இப்போது உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் இணையத்தளத்தில் இந்த தாலாட்டி பாடல் மிகவும் பிரபலமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை கேட்க..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles