
வயிற்றுப் போக்கினால் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக பிரதமர் துறை அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் தலைநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



