31.6 C
Kuala Lumpur
Thursday, July 23, 2026

Vetri

20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கும் ராயப்பனுக்கு 500 வெள்ளி சமூக நல நிதியுதவி!

🔥 Views : 15
👁 Reading Now : 48

செமினி தாமான் மேவாவில் ராயப்பன் என்பவர் 20 ஆண்டுக்கும் மேலாக படுத்தப் படுக்கையில் இருக்கிறார்.
விபத்தில் சிக்கியதால் இவர் எழுந்து நடக்கும் சக்தியை இழந்து விட்டார்.
20 ஆண்டுகளாக இவரை தாயார் ருக்குமணி சகோதரி வொரோனிக்கா பராமரித்து வருகிறார்கள்.
சமூகநல இலாகாவின் உதவியை நாடியும் ராயப்பனுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்றதாக காஜாங் கவுன்சிலர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
உலுலங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி மற்றும் இளைஞர் பகுதி துணைத்தலைவர் விஷ்ணு ஆகியோர் உதவியோடு தற்போது மாதம்தோறும் ராயப்பனுக்கு 500 வெள்ளி சமூகநல நிதியுதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாயார் ருக்குமணிக்கு மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் 250 வெள்ளி கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கவுன்சிலர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே சகோதரர்
ராயப்பன் மற்றும் தாயார் ருக்குமணி ஆகியோருக்கு சமூக நல இலாகா மூலம் நிதியுதவி பெற்றுத் தந்த கவுன்சிலர் ராமச்சந்திரன், உலுலங்காட் தொகுதி தலைவர் ராஜன் மற்றும் இளைஞர் பகுதி துணைத்தலைவர் விஷ்ணு ஆகியோருக்கு வொரோனிக்கா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles