27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களின் குடும்பத்திற்கு 15 லட்சம் இழப்பீடு

பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களின் குடும்பத்திற்கு 15 லட்சம் வெள்ளியை இழப்பீடாக வழங்கும்படி ஷா ஆலம் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி ஷா ஆலமில் உள்ள கிளன்மேரியில் முகமட் ஷாமில் (வயது 15), முகமட் ஹைருல் (வயது 22) மற்றும் முகமட் ஹானாபி (வயது 21) ஆகியோர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் கடந்த 2006 செப்டம்பர் 1ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் இந்த மூன்று இளைஞர்கள் மரணத்திற்கு போலீஸ் மற்றும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களின் குடும்பத்திற்கு எவ்வளவு இழப்பீடு என்பதை ஷா ஆலம் உயர்நீதிமன்றம் மதிப்பீடு செய்யும் என்று கூட்டரசு நீதிமன்றம் அறிவித்தது.
இந்த வழக்கு தொடர்பில் ஷா ஆலம் உயர்நீதிமன்ற நீதிபதி கதிஜா இட்ரிஸ் இன்று தனது தீர்ப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களின் குடும்பத்திற்கு 15 லட்சத்து 19,200 வெள்ளி மை இழப்பீடாக வழங்கும்படி உத்தரவிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles