31.6 C
Kuala Lumpur
Thursday, July 23, 2026

Vetri

சிலாங்கூர் குழுவின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் கூண் குணா காலாமானார்

🔥 Views : 16
👁 Reading Now : 36

மலேசியா பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் சிலாங்கூர் குழுவுக்கு விளையாடிய நட்சத்திர ஆட்டக்காரர் கூண் குணா என்றழைக்கப்படும் குணசேகரன் இன்று காலமானார்.
கடந்த 1988,1990ஆம் ஆண்டுகளில் இவர் சிலாங்கூர் குழுவுக்கு விளையாடினார்.
பின்னர் பரதன் கிண்ணம்,
கிள்ளான் எம்பிகே, கிள்ளான் லக்கி ஸ்டார் சித்தா, காப்பார் ஆர்ஜே தென்றல் மற்றும் கிள்ளான் உதயசூரியன் கிளப்புகளுக்கு விளையாடி இவர் சாதனை படைத்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் ஒரு நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வந்த இவர் இன்று உடல்நிலை மோசம் அடைந்தைத் தொடர்ந்து காலமானார்.
இறுதி சடங்கிற்கு பின்னர் அன்னாரின் நல்லுடல் நாளை கிள்ளான் சிம்பாங் லீமா இந்து மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
ஒரு தலைச்சிறந்த கால்பந்து வீரரை நாம் இழந்திருக்கிறோம் என்று சிலாங்கூர் இந்திய விளையாட்டு பேரவை உதவித் தலைவர் மனோ பரமசிவம் மற்றும் காப்பார் ஆர்ஜே தென்றல் நிர்வாகி சந்துரு ஆகியோர் குறிப்பிட்டனர்.
தொடர்புக்கு கார்த்திக் 018-2616558.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles