31.8 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

சிலாங்கூர் கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவராக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா நியமனம்!

🔥 Views : 8
👁 Reading Now : 65

சிலாங்கூர் மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவராக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதி தலைவராக நஜ்வான் இருந்தார்.
இவருக்கு பதில் புதிய இளைஞர் பிரிவு தலைவராக சுவா பொறுப்பேற்றுள்ளார். இவரின் நியமனம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக கெஅடிலான் இளைஞர் பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ரவாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இவர் 23, 800 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
வணிகத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கும் இவர் மக்கள் மத்தியில் மிகச் சிறந்த சேவையாளராக விளங்குகிறார். இதனிடையே சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவு தலைவராக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் நியமனம் செய்யப்பட்டிருப்பதை செலாயாங் கெஅடிலான் உதவித் தலைவர் மற்றும் கவுன்சிலர் ஏண்டி வரவேற்றுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles