
நாட்டில் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் குறைந்தது மூன்று பேர் ஒரு நாளைக்கு தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பேரா பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு 609 தற்கொலைச் சம்பவங்கள், 2020 ஆண்டு 631 தற்கொலைச் சம்பவங்கள்.
இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 468 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாலில் ஹசான் தெரிவித்தார்.
தற்கொலை செய்து கொண்டவர்களில் 1,427பேர் பெண்களாவர். 281 பேர் ஆண்கள் என்று அவர் தெரிவித்தார்..
இதுபற்றி கருத்துரைத்த பேரா மாநில பக்கத்தான் ஹரப்பான் செயலாளருமான சிவகுமார் கூறுகையில் குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று பேராவது தற்கொலை செய்துகொள்கிறார்கள் இன்று கணக்கிடப்படுகிறது.
நோய்த்தொற்று தாக்கத்தினால் மக்கள் வருமானத்தை இழந்து தவிக்கிறார்கள். வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் குமுறி அழுகிறார்கள்.
மக்களைக் காப்பாற்ற வேண்டிய பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கம் ஒரு தோல்வி கண்ட அரசாங்கமாக விளங்குகிறது.
அதனால்தான் மக்கள் தோல்வி கண்ட அரசாங்கம் என்று குறை கூறுகிறார்கள்.
மக்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள் இதனால் வருமானமும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
சமீபகாலமாக மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இது பெரும் வேதனை அளிப்பதாக அவர் சொன்னார்.
