32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்ற தொகுதியில் இலவச கொரோனோ மருத்துவ பரிசோதனை!

🔥 Views : 11
👁 Reading Now : 62

சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்ற தொகுதிகளில் இலவச கொரோனா நோய்த்தொற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில மக்களுக்கு இந்த மருத்துவ பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்.
சிலாங்கூர் மாநிலத்தில் எல்லா தொகுதிகளிலும் இந்த மருத்துவ பரிசோதனை தினசரி மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்..
வரும் மே 8ஆம் தேதி காஜாங் மற்றும் செமினி வட்டாரத்தில் முதல் கட்டமாக இந்த கோவிட் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து இருந்து சிலாங்கூர் மாநில மக்கள் விடுபடவேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த இலவச மருத்துவ பரிசோதனையை மேற்கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles