29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

பரிதாபமாக உயிரிழந்த கணபதிக்கு நீதி கிடைக்க மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பிரார்த்தனை!

🔥 Views : 17
👁 Reading Now : 66

தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்ட போது கடுமையாகத் தாக்கப்பட்டதால் இறந்ததாக கூறப்படும் கணபதி என்ற இளைஞருக்கு நீதி கிடைக்க வரும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கோலாலம்பூர் புக்கிட் அம்மன் போலீஸ் நிலையத்தின் முன் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பிரார்த்தனை செய்யப்படும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தெரிவித்தார்.
தன் மகன் கடுமையாகத் தாக்கப்பட்டதால் உயிரிழந்தார் என்று அவரின் தாயார் தனலட்சுமி போலீஸ் புகார் செய்து இருக்கிறார்.
தனது அன்பு மகனை இழந்து பரிதவிக்கும் தாயார் தனலட்சுமிக்கும் கணபதி குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்க நாங்கள் இறுதிவரை போராடுவோம்.
கணபதி மரணம் தொடர்பில் போலீசார் ஒளிவு மறைவின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பிரபாகரன் கேட்டுக்கொண்டார்.
அந்த வகையில் இவருக்கு நீதி கிடைக்க மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பிரார்த்தனை செய்யப்படும் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles