31.3 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

கிள்ளான் பண்டார் புக்கிங் திங்கி குடியிருப்பு பகுதி சீரமைக்க 34 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு!

🔥 Views : 40
👁 Reading Now : 22

சிலாங்கூர் மாநிலத்தில் மக்கள் அதிகம் வாழும் பண்டர் புக்கிட் திங்கி குடியிருப்பு பகுதியை சீரமைக்க 34 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. புக்கிட் திங்கி பங்சாபூரி குடியிருப்பு பகுதியில் பழுது பார்க்கப்பட உள்ளது.
கனத்த மழை பெய்யும் காலங்களில் இந்த குடியிருப்பு பகுதிகளில் கூரைகளின் மழை நீர் வீடுகளுக்குள் வருகின்றது.
கூரைகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் எந்த நேரத்திலும் இங்கு வாழும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.


செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் தலைமையில் அதிகாரிகள் மக்களை நேரில் சென்று அவர்கள் எதிர்நோக்கும் குறைகளை நேரில் கேட்டறிந்தனர்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோஸியா உட்பட அதிகாரிகளும் இந்த குடியிருப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.
கூரைகள் அனைத்தும் பழுதடைந்து மோசமாக இருப்பதால் மழைக்காலங்களில் வெள்ளம் தங்கள் வீடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் மேற்கொண்ட தீவிர முயற்சியால் இந்த குடியிருப்புகளை பழுது பார்க்க 34 லட்சம் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக நாங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வரும் டாக்டர் குணராஜ் மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles