27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மீண்டும் பயணத்தை தொடங்குகிறது வளைகுடா விமானங்கள்!

🔥 Views : 9
👁 Reading Now : 25

ஐக்கிய அரபு சிற்றரசு உட்பட வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் மீண்டும் தங்களது பயண சேவையை தொடங்கி இருப்பதாக கே.பி. டிராவல்ஸ் உரிமையாளர் கேபி சாமி தெரிவித்தார்.
தற்போது தினசரி கோலாலம்பூரில் இருந்து துபாய் நோக்கி ஐக்கிய அரபு சிற்றரசு சேர்ந்த எமிரேட்ஸ் விமானம் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறது.
கத்தார் நாட்டைச் சேர்ந்த விமானங்கள் டோஹாவே நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளன. அதேபோல் ஓமன் விமானமும் தனது சிறகை விரித்து உள்ளது.
தினசரி கோலாலம்பூரில் இருந்து வளைகுடா நாடுகளை நோக்கி விமானங்கள் செல்வதால் மலேசியாவில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்திய பிரஜைகள் இந்த விமானங்களில் பயணம் செய்யலாம் என்று கேபி சாமி தெரிவித்தார்.
வளைகுடா சென்றதும் அங்கிருந்து நேரடியாக இந்தியாவின் பல இடங்களுக்கு விமானங்கள் மூலம் சென்றடையலாம்.


மாதத்திற்கு ஒரு விமானத்துக்காக காத்திருந்த இந்திய பிரஜைகள் இனிமேல் தங்குதடையின்றி வளைகுடா நாடுகளுக்குச் சென்று பின்னர் அங்கிருந்து தங்களது ஊருக்குத் திரும்பலாம் என்று அவர் குறிப்பிட்டார். இந்திய பிரஜைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தர கேபிஎஸ் டிராவல்ஸ் தயார் நிலையில் உள்ளத.
நாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்று தாக்கத்தினால் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கான இந்திய பிரதிகளை பத்திரமாக தாயகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மலேசிய பிரஜைகளும் நாட்டிற்கு அழைத்து வந்திருக்கிறோம் ஆகவே கே பி எஸ் டிராவல்ஸ் உதவியை நாடினால் உங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புக்கு கே.பி.சாமி 016-2626755 அல்லது நிர்வாகி கவின் 016- 2229341 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles