31.4 C
Kuala Lumpur
Wednesday, August 19, 2026

Vetri

பிபிஆர் குடியிருப்பு படிக்கட்டுகளில் முள்வெளி கம்பிகள்!

🔥 Views : 30
👁 Reading Now : 27

Emco அமுலில் இருக்கும் கம்போங் பாரு ஸ்தாப்பாக் ஆயர் பனாஸ் பிபிஆர் குடியிருப்பு பகுதிகளில் படிக்கட்டுகளில் முள்வேலி கம்பிகளை அமைக்கும்படி தீயணைப்பு படை உத்தரவிடவில்லை என்று அந்த இலாகாவின் தலைமை இயக்குனர் முகமட் ஹம்டான் மறுத்துள்ளார்.
குடியிருப்பு பகுதிகளில் படிக்கட்டுகளில் முள்வேலி கம்பிகளை அமைப்பது மிகவும் ஆபத்தானது.
தீ விபத்து போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
மேலும் தீ விபத்து சிறு சட்டங்களுக்கு இது விரோதமானது என்று அவர்.
கடுமையான மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மக்கள் வெளியே செல்லாமல் இருக்கவும் யாரும் உள்ளே வராமல் இருக்கவும் முள் வேலி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தீயணைப்பு படை ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்று அவர் சொன்னார். இதனையே கடுமையான மக்கள் நடமாட்டம் உத்தரவு அமுல்படுத்துவது தொடர்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் படிக்கட்டுகளில் முள்வேலி கம்பிகள் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் தீயணைப்பு படை அதிகாரிகள் கலந்துகொண்டதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ஹாரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles