
நோய்த்தொற்று தாக்கத்தினால் வருமானம் இழந்து பாதிக்கப்பட்ட காராக் சபாய் வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த 700 குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கி இருப்பதாக காமாட்சி துரைராஜ் தெரிவித்தார்.
தமது தொகுதி சேவை மையத்தின் மூலம் மற்றும் நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள் வழங்கிய உதவிகள் மூலம் இந்த உணவுக் கூடைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
மக்களை காக்க வேண்டிய அரசாங்கம் தவறிவிட்டது. இதனால் பொதுமக்கள் உணவுக்காக தங்கள் இல்லங்களில் வெள்ளைக் கொடிகளை பறக்க விட்டுள்ளனர். அந்தவகையில் சபாய் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவிகளை செய்து வருகிறோம்.
எனக்கு பக்கப்பலமாக இருக்கும் தொண்டர்களுக்கும் உதவிகள் வழங்கும் நண்பர்களுக்கும் இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.



