32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் போலீஸ் துறைக்கு பாராட்டுக்கள்

🔥 Views : 11
👁 Reading Now : 64

நோய்த்தொற்றினால் சிலாங்கூர் மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடைமயான மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இவ்வேளையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவிகளை வழங்க சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் மற்றும் அவரின் குழுவினர் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
பெருந்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி தெரிவித்தார்.
போலீஸ் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் எடுத்துள்ள இந்த முயற்சி மனிதாபிமானது மற்றும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக டதஞ அமிருடின் சாரி தெரிவித்தார்.
நோய் தொற்று ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இக்கட்டான சூழலில் வாழ்க்கையை நடத்தி வருவோருக்கு இத்தகைய மனிதாபிமான உதவிகள் பெரிதும் தேவைப்படுகிறது. டத்தோ அர்ஜூனைடி அவர்களுக்கும் அவரின் குழுவினருக்கும் பாராட்டுக்கள் என டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles