26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வெள்ளைக் கொடிகளை ஏற்றிய திரான்ஸ் கிரியான் 40 இந்திய குடும்பங்களுக்கு டாக்டர் ராமசாமி உதவி

🔥 Views : 9
👁 Reading Now : 49

நாங்கள் சிரமப்படுகிறோம் என்பதை வெளிப்படுத்து நோக்கத்தில் ,தாங்கள் வீட்டின் முன் வெள்ளைக் கொடியை பறக்கவிட்டு தங்களின் வறுமை நிலையை வெளிப்படுத்திய இங்கு நிபோங் திபால் தென் செபராங் பிறை,திரான்ஸ் கிரியான் தோட்டதைச் சேர்ந்த 40 இந்தியக் குடும்பங்களுக்கு பிறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பி.இராமசாமி உணவுக் கூடைகளை வழங்கி உதவினார்.

தோல்வி கண்ட பெரிகாத்தான நேஷனல் அரசாங்கத்தின் செயலால் தற்போது நாட்டு மக்கள் உண்ண உணவின்றி பல்வேறு சிரமங்களையும் வேதனைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இத்துயரை நாட்டு தலைவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில்,நாடு தழுவிய நிலையில் வெள்ளைக் கொடி பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்
தங்களின் வேதனை வெள்ளைக் கொடி வாயிலாக மக்கள் வெளிப்படையாக வெளியில் தெரிவிப்பது எந்த வகையிலும் தவறில்லை.
இன்று இந்த தோட்டத்தில் தமது தலைமையில் தொடங்கப்பட்டிருப்பது முதல் கட்ட வெள்ளைக் கொடி பிரச்சாரமாகுமென பினாங்கு மாநிலத் துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி குறிப்பிட்டார்.
இந்த சுங்கை ஆச்சே தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமது கடமையை செய்ய தவறியிருப்பதால் இங்குள்ள மக்கள் சிரமத்திற்குள்ளாக்கியிருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தேசியத் தலைவர் டேவிட் மார்ஷெல்,பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ எம்.இராமச்சந்திரன்,தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரும் கலந்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles