26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வாகன ஓட்டுனரிடம் லட்சம்!இரு போலீஸ்காரர்களுக்கு எதிராக விசாரணை

🔥 Views : 5
👁 Reading Now : 56

இரு போலீஸ்காரர்கள் வாகன ஓட்டுனரிடம் லஞ்சம் கேட்கும் காணொளி ஒன்று வைரலானதை தொடர்ந்து கிள்ளான் மாவட்ட போலீஸ் விசாரணை அறிக்கையை போலீசார் திறந்துள்ளது.
கோலக் கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமானில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் இரு போலீஸ்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூருல் ஹூடா முகமது சாலே கூறினார்.
அந்த காணொளியை பகிர்ந்த நபர் அல்லது இச்சம்பவம் தொடர்பானத் தகவல்களை கொண்டிருப்பவர்கள் விசாரணைக்கு உதவ வேண்டும்.
அந்த காணொளி டிவிட்டர் கணக்கு ஒன்றின் வாயிலாக நேற்று மறுபடியும் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் அம்பலத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரை சாலையோரம் தடுத்து நிறுத்தும் இரு போலீஸ்கார ர்கள் அவரிடம் பணம் கேட்கும் 1.02 விநாடி கொண்ட அந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles