
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்க முழு ஆதரவு வழங்கியது உண்மையே என்று பகாங் ஜெராண்டுட் நாடாளுமன்ற உறுப்பினர் அமாட் நஸ்லான் இன்று உறுதிப்படுத்தினார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதற்கு சத்திய பிரமாணத்திலும் கையெழுத்திட்டுதாக அவர் சொன்னார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதற்கு நான் ஆதரவு தெரிவித்து இருக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர் மற்ற எம்பிக்கள் யார் என்பது பற்றி குறிப்பிட மறுத்து விட்டார்.
துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையில் பக்காத்தான் ஹரப்பான் தோல்வி அடைந்தது.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான பெரிகாத்தான் நேசனல் மக்களுக்கு உதவுவதில் தோல்வி கண்டிருக்கிறது.
ஆகவே டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கம் மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அந்த வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் புதிய அரசாங்கம் மலர முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார் அவர்.
