28.8 C
Kuala Lumpur
Wednesday, August 19, 2026

Vetri

கருப்பு குறியீடு மற்றும் கருப்பு திங்களை மலேசிய மருத்துவர் சங்கம் ஆதரிக்கிறது!

🔥 Views : 42
👁 Reading Now : 37

நாட்டில் சுகாதார ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான தனது நிலைப்பாட்டை மீண்டும் மலேசிய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியது.
ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஆதரஞ தெரிவிக்க மக்களை ஊக்குவிக்கும் பிரச்சாரமான ஜூலை 1 முதல் 12 வரை `கருப்பு குறியீடு மற்றும் ஜூலை 12 அன்று கருப்பு திங்கள் ஆகியவற்றை ஆதரிப்பதாக மலேசிய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும் நோய்த்தொற்று காலத்தில் ஓப்பந்த மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலக வேண்டும் மற்றும் நாடாளுமன்றம் உடனடியாக கூடி அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தும் கருப்புக் கொடி பிரச்சாரத்தை நாங்கள் ஆதரிப்பதாக பிறர் தவறாகப் புரிந்துகொள்வதை விரும்பவில்லை என்று மலேசிய மருத்துவர்கள் சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles