
அண்மைக்காலமாக மலேசியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.
கடந்த 2019 ஆண்டில் 609 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 631 ஆக அதிகரித்தது.
இவ்வாண்டு ஐந்து மாதங்களில் 468 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று அரச மலேசிய போலீஸ் படை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இந்நிலை தொடர்ந்தால் இவ்வாண்டில் மலேசியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
நோய்த்தொற்று தாக்கத்தினால் வருமானம் மற்றும் வேலை இழந்த மலேசியர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீடியோ படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



