28.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

அஸ்மின் அலி மனு தள்ளுபடி!நீதிமன்ற முடிவை வரவேற்றார் அமைச்சர் மேக்சிமெஸ் ஒங்கிலி

🔥 Views : 10
👁 Reading Now : 50
Azmin Ali

கோம்பாக் தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்கள் தொடுத்த வழக்கு மனுவை தள்ளுபடி செய்வதில் கடந்த வாரம் அஸ்மின் அலி தோல்வி கண்டார்.
கெஅடிலான் சின்னத்தில் போட்டியிட்ட அஸ்மின் அலிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தோம்.
ஆனால் அவர் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து அணி மாறிவிட்டார் என்று பத்து வாக்காளர்கள் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு மனுவை தள்ளுபடி செய்யும்படி அஸ்மின் அலி செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி தாவல் குறித்து கருத்துரைத்த சபா பிபி எஸ் கட்சியின் தலைவரும் பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தில் அமைச்சராக இடம்பெற்றிருக்கும் மேக்ஸிமஸ் ஓங்கிலி, நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார்.
கோம்பாக் தோகுதி வாக்காளருக்கு ஆதரவாக தீர்ப்பு அமைய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles