29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

ஆதரவை மீட்டுக் கொண்டது அம்னோ! டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலக வேண்டும்!

🔥 Views : 17
👁 Reading Now : 42

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாக அம்னோ அதிரடியாக அறிவித்துள்ளது.
நேற்றிரவு அம்னோ உச்சமன்றக் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அதிகாலை நேரத்தில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி நேரடியாக அறிவித்தார்.
பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அரசாங்கத்திற்கு அம்னோ வழங்கிய ஆதரவை, அம்னோ உச்சமன்றம் உடனடியாக மீட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.
மேலும் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கெளரவமான முறையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அவருக்கு பதில் இடைக்கால புதிய பிரதமர் நியமிக்கப்படவேண்டும் என்று அம்னோ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
நாட்டில் நோய்த்தொற்றுகள் துடைத்தொழிக்கும் வரை இடைக்கால பிரதமர் தனது பணிகளை மேற்கொள்வார்.
நாட்டில் நோய்த்தொற்றை கையாளுவதில் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டதால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை அம்னோ உடனடியாக மீட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
அம்னோவின் இந்த அதிரடி முடிவால் இனி எந்த நேரத்திலும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் கவிழும் அபாயத்தை எதிர் நோக்கி உள்ளது.
கடந்த 2020 மார்ச் மாதம் அம்னோ உச்சமன்ற செயலவை டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்ததற்குக் காரணம், நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் காக்கப்படவேண்டும் என்பதன் அடிப்படையில்தான். அதோடு கோவிட்-19 தொற்றைக் கையாள வேண்டும் என்பது முதன்மை நோக்கமாக இருந்தது.
ஆனால், டான்ஸ்ரீ முகைதீன் தலைமையிலான அரசு நல்லாட்சியைக் கொடுக்கத் தவறிவிட்டது.
டான்ஸ்ரீ முகைதீன் யாசின் ஆட்சி தோல்வியடைந்துவிட்டது.
இதனால், மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இடைக்காலமாக பதவி ஏற்கும் பிரதமர் குறிப்பிட்ட நாளுக்குப் பின்னர் நாட்டில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மாமன்னருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்..
இதனிடையே 38 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அதிரடி முடிவுக்கு கட்டுப்படுவார்களா என்பது தெரியவில்லை.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ இஷாமுடின் பக்கம் அவர்கள் இருக்கிறார்கள்.
இருப்பினும் இரண்டு அம்னோ எம்பிக்கள் ஆதரவை மீட்டுக் கொண்டால் போதும். அரசாங்கம் ஆட்டம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles