
டத்தோ விகேகே. தியாகராஜன், தலைமையில் இயங்கும், மலேசிய இந்தியக் கலைஞர்கள் அறவாரியம் – யாசி, அதன் உறுப்பினர்களின் தற்போதைய நிலைக் குறித்து பெரிதும் கவலை கொண்டுள்ளது.
அவர்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க, யாசி அறவாரியம் தனது 587 உறுப்பினர்களுக்கு தலா 300 வெள்ளி உதவித் தொகை வழங்க முடிவெடுத்துள்ளது.
இந்த நிதியை ஒவ்வொரு உறுப்பினரும் இலகுவாக பெறும் பொருட்டு, ஒரு வலைத்தளத்தையும் அது உருவாக்கியுள்ளது.
www.yasi.app
இந்த வலைத்தளத்தில் பதிவு செய்வதன் வழி யாசி உறுப்பினர்கள் இலகுவாக இந்த நிதியைப் பெறலாம்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் மலேசிய இந்தியக் கலைஞர்கள் அறவாரியத்தின் புரவலர் துன் சாமிவேலுவின் கடும் முயற்சியில், கிட்டத்தட்ட 7 லட்சம் வெள்ளி நிதி திரட்டப்பட்டது.
அதோடு கலைஞர்கள் பயன் பெறும் வகையில் பல நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இப்போது வழங்கப்படும் இந்த நிதி ஒரு சிறு உதவியே என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புக்கு
செயலாளர் சங்கமம் சுப்ரா 016-3310288.



