
பல்வேறு நிலைகளில் பல்வேறு பிரச்சனைகளையும்,சிரமங்களையும் எதிர்நோக்கி வரும்,பேரா பாகான் செராய் ஜாலான் சியாக்காப்பில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் பி40 பிரிவைச் சேர்ந்த ஏழு இந்தியக் குடும்பங்களுக்க பிரபல வர்த்தக நிறுவனமான எகோன்சேவ் பாகான் செராய் கிளையின் ஏற்பாட்டில் உணவு கூடைகள் வழங்கப்பட்டன.
இங்கு வசித்து வரும் இக்குடும்பங்கள் பல வேளைகளில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாலும், அண்மைய ஓராண்டுகளுக்கு மேலாக கோவிட் – 19 தொற்றின் தாக்கத்தால் வேலைகளை இழந்து,வருமானமும் இன்றி அவதியுற்று வருவது மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.
இந்நிலையில் அவர்களின் நிலைமையை கேள்வியுற்று எகோன்சேவ் நிர்வாகம் தேவையான சமையல் பொருட்களை நேரில் சென்று குடும்பங்களிடம் ஒப்படைத்தது.
நிறுவனத்தின் வட மாநில விற்பனைப் பிரிவு நிர்வாகி ஸம்சுரி, தென் செபராங் பிறை சுங்கை ஜாவி கிளையின் நிர்வாகி கார்த்திக் ஆகியோரின் ஆதரவில் இந்த உதவி வழங்கப் பட்டது.



