
பிரதமருக்கு வழங்கி வரும் ஆதரவை மீட்டுக்கொள்வதற்கு அம்னோ உச்சமன்றம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியின் முடிவுக்கு அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்கள் கட்டுப்படலாம்.
ஆனால், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக அரசாங்கத்தில் பதவி வகிப்பவர்கள் இதற்கு கட்டுப்படுவார்களா என்பது சந்தேகமே என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி குறிப்பிட்டார்.
சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் பிரதமருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
ஆகவே அம்னோ உச்சமன்ற முடிவுக்கு இவர்கள் கட்டுப்படுவது என்பது கேள்விக்குறியே என்றார் அவர்.
பெர்சத்து கட்சி தனது அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ள அம்னோ மற்றும் பாஸ் கட்சியின் ஆதரவு கண்டிப்பாக தேவைப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.



