32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி

🔥 Views : 6
👁 Reading Now : 40

ஜொகூர் மாநிலத்தில் மெங்கிபோல் சட்ட மன்ற தொகுதியைச் சேர்ந்த 27 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் பத்து இந்திய மாணவர்களும் ஏழு சீன மாணவர்களும் பத்து மலாய் மாணவர்களும் அடங்குவார்கள்.
இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டதாக ஜொகூர் குளுவாங் மஇகா தொகுதி தலைவர் கோ. இராமன் தெரிவித்தார்.
10 பெற்ற மாணவர்களுக்கு வெள்ளியும் இதர மாணவர்களுக்கு தலா 300 வெள்ளியும் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
ஆண்டுதோறும் எஸ்பிஎம் உட்பட அனைத்து தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாணவர்களுக்கு இதுபோன்ற நிதி உதவி வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்
இதனிடையே வசதி குறைந்த மக்களுக்கும் உதவி பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles