
ஈவு இரக்கமின்றி நாய்களை கொன்ற கெடா கூலிம் நகராண்மைக் கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிராணிகள் நல இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எடுக்க தவறினால் அவர்களுக்கு எதிராக அலோர் ஸ்டார் நீதிமன்றத்தில் சிவில் ஜம் வழக்கு தொடுக்கப்படும் என்று பிராணிகள் மீட்பு க்கான மலேசிய சுயேட்சை இயக்க வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் எச்சரித்தார்.
நாய்களை கொன்ற
நகராண்மைக் கழக
உறுப்பினர்கள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
கூலிம் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள நாய்களை கூலிம் நாகரான்மை கழகம் அதிகாரிகள் கொடூரமாக கொல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
அப்பாவி மிருகங்களை ஈவு இரக்கமின்றி கொன்ற இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.



