
நாட்டைச் சூழ்ந்துள்ள கோவிட் 19 காலகட்டத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்டும.இ.கா, மகளிர் பிரிவ வசதி குறைந்த மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உணவுக்கூடை வழங்கும் நடவடிக்கையையை முன்னேடுத்துள்ளது.
ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆதரவில் ம.இ.கா மகளிர் அணி நாடு தழுவிய நிலையில் உணவுக்கூடை” வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று மகளிர் பிரிவு தலைவி உஷா நந்தினி தெரிவித்தார்.
மக்களின் சுமையைக் குறைக்க ம.இ.கா மகளிர் பிரிவு உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை முன்னேடுத்துள்ளதாக உஷா நந்தினி சொன்னார்.
இந்த உணவுப் பொருட்கள் நாடு தழுவிய நிலையில் இருக்கும் ம.இ.கா தொகுதித் தலைவிகள், கிளைத் தலைவர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.



