33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

தனது சகாக்களுக்கு அரசியல் செய்ய வேண்டாம் என்று துணைப் பிரதமர் ஆலோசனை கூற வேண்டும்!

🔥 Views : 10
👁 Reading Now : 31

பிரதமரிடமும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களிடம் அரசியல் நடத்த வேண்டாம் என்று
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆலோசனை கூற வேண்டும் என்று கெஅடிலான் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.
ஜனவரி மாதம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து, கோவிட் -19 தொற்றைக் கையாள்வதற்கும் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கும் இந்த அரசாங்கத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக சைபுடின் கூறினார்.
அப்படியிருந்தும், அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகளுக்கும் கோவிட் -19 தொற்றைத் தடுப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்னோ கட்சி பிரதமருக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதற்கும் கோவிட்டுடன் போராடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இஸ்மாயிலைத் துணைப் பிரதமராக மொகிதீன் யாசின் நியமித்ததற்கும், கோவிட்டை எதிர்த்து போராடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மக்களுக்கு ஒரு துளிகூட நன்மை இதில் இல்லை. இது பிரதமர் தன்னைக் காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை தவிர மக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல.
துணைப் பிரதமருக்கு எனது செய்தி என்னவென்றால் உங்கள் அறிவுறுத்தலைப் பிரதமருக்கும், பிஎன் சகாக்களுக்கும் அனுப்புங்கள், என்று கூலிம் பண்டார் பாரு எம்.பி.யான சைபுடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles