
நோய்த்தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் 15 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
இதன்வழி 1,500 குடும்பங்கள் பயன்பெறும் என்று தெரிவித்த அவர் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்றார்.
கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த உதவித் தொகைக்கு http://www.ssselangorprihatin.com அகப் பக்கத்தின் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தங்களின் நேசத்திற்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களின் துயரத்தில் மாநில அரசும் பங்கு கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.



