
உதவிகளைப் பெறுவதற்கு மலேசிய மக்கள் வெள்ளைக் கொடிகளை ஏற்ற தேவையில்லை என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இன்று அறிவித்தார்.
உதவி தேவைப்படுவோர் விபரங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது.
ஆகவே வெள்ளைக் கொடிகளையும் கருப்பு குறிகளையும் ஏற்ற தேவையில்லை.
நீல கொடிகளை ஏற்றினால் பரவாயில்லை.
நான் சொல்ல வந்த அர்த்தம் என்னவென்றால் அமைச்சு அனைத்து பதிவுகளையும் கொண்டிருக்கிறது என்றார்.
. இதனிடையே இரண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் மாநிலம் கடக்க அனுமதி வழங்குவது தொடர்பில் தடுப்பூசி மருந்துக்கான கையிருப்பை உறுதி செய்யும் குழுவை கேட்டுக் கொண்டதாக அவர் சொன்னார்.
நேற்றுவரை நாட்டில் ஒரு கோடியை 26 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதில் 40 லட்சம் பேர் இரண்டு தடுப்பூசி களை முழுமையாக பெற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.
தோல்வி கண்ட அரசாங்கம் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.



